• Sep 19 2024

பழைய காலத்து உடையில் விஜய் சேதுபதி-விக்ரம் படத்திலிருந்து வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள "விக்ரம்" திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் திகதி ரீலீஸாக உள்ளது.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.கமலின் 4 ஆண்டுகளின் இடைவெளியின் பின் உருவாகி உள்ள இந்த திரைப்படம் வெளியாக்குவதிலும் படத்தின் மீது அநேக எதிர்பார்ப்பு உள்ளது.

கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் திகதி 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் பெயரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.விஜய் சேதுபதி ‘சந்தானம்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான போஸ்டர் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக பகத் பாசில் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் புதிய BTS புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் விஜய் சேதுபதியின் உடைகள் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவை ரெட்ரோ ஸ்டைலில் இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

முன்னதாக விஜய் சேதுபதியின் போஸ்டரும் பழைய விக்ரம் படத்தின் சத்யராஜ் கதாபாத்திரமும் அணிந்திருக்கும் கண்ணாடியும் ஒரே மாதிரியாக இருக்கும் படி வெளியானதுஇணையத்தில் வைரலாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement