• May 06 2026

இன்பநிதி தயாரிப்பில் இணையும் இமயங்கள்! ரஜினி - கமல் படத்தின் ப்ரோமோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

shali / 2 months ago

Advertisement

Listen News!

இன்றைய தமிழ்த் திரையுலகில் எதிர்பார்ப்பின் பரிமாணத்தை மீறி வருகிற இரு மெகா ஸ்டார்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் திகழ்கின்றனர். இந்த இரு நடிகர்களும் இணைந்து நடிக்கும் படம், தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்றுச் சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.


சமீபத்தில் வெளியாகிய தகவல்களின்படி, ரஜினி- கமல் சேர்ந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. 

அத்துடன், இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் துணை முதலமைச்சர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி. 

படக்குழு தற்பொழுது அதிகாரபூர்வமாக தெரிவித்ததாவது, புரோமோ வெளியீடு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்றதுடன், புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement