• May 05 2026

கஜோல் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை.! டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு

shali / 2 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள கஜோல், தனியுரிமை மற்றும் புகைப்பட உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் கடுமையான நிலைப்பாட்டை காப்பாற்றி வருகிறார். சமீபத்தில் அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தமது பெயர் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தப்படாமல் தடுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு தற்போது தீர்வு பெற்றுள்ளது, மற்றும் அதனால் புகைப்பட உரிமைகள் மற்றும் வணிக நோக்கில் பெயர் பயன்பாடு தொடர்பாக ஒரு முக்கிய நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில், வணிக நோக்கில் கஜோலின் பெயர் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அத்துடன், நடிகையின் உருவத்தை ஒத்த ஏஐ (Artificial Intelligence) உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும், அனுமதியின்றி வெளியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement