• Jan 19 2025

கமலிடம் வாங்கிய செருப்படி.. பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகை? இந்தியன் 2 நடிகர் ஓபன் டாக்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இந்தியன் 2 திரைப்படம் கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 12ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் நடித்த ரிஷிகாந்த் இந்த படத்தில் நடித்தது தொடர்பாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இந்த படத்திற்கு அறிவிப்பு வரும்போது நானும் அனைவர் போலவும் முயற்சி செய்தேன். என்னை டெஸ்ட் செய்த சங்கர்   நடனமாட தெரியுமா என்று கேட்டார். அதன் பின்பு ஓகே சொன்னார். இரண்டாவது நாளிலிருந்து நான் இந்தியன் 2 வில் நடிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த படத்தில் உள்ள நடிகர்களுள் நான்தான் மிகவும் அனுபவம் குறைவான நடிகர். கமல் சாரின் தீவிர ரசிகன் நான்.  நான் அவரது அனைத்து படங்களுமே பார்ப்பேன்.


சினிமாவில் இன்றைக்கு அறிமுகமாகியுள்ள தொழில்நுட்பம் வரை அனைத்தும் அவருக்கு தெரியும். இன்றைக்கு ரிலீஸ் ஆகியுள்ள படங்கள் குறித்து அவருக்கு தெரியும். சினிமாவில் ஒரு கட்டத்திற்கு பிறகு பெரும்பாலானவர்களுக்கு அவ்வளவு தான் இதில் ஒன்றும் இல்லை பார்த்துக்கலாம் என தோன்றும். ஆனால் எனக்கு செருப்படி வாங்கியதைப் போல் இருந்தது. அதற்கு காரணம் சினிமாவில் தொடர்ந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் உள்ளது என அவர் புரிய வைத்தார்.

மேலும் பிரியா பவானி சங்கர் ராசி இல்லாத நடிகை என பேசப்படுகின்றது இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது எனக்கு புரியவில்லை. அவர் சிறந்த நடிகர். அவர் என்னுடன் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். எனக்கு அவர் மீது மதிப்பும் அன்பும் உள்ளது. இது போன்ற கமெண்ட்டுகளில் கவனம் செலுத்தாமல் அவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement