• Jan 19 2025

தமிழ் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ’குருவாயூர் அம்பல நடையில்’.. திரைவிமர்சனம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ என்ற படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்த படம் ’குருவாயூர் அம்பல நடையில்’.

பிரித்விராஜ், நிகிலா விமல், அனஸ்வரராஜன், பசில் ஜோசப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற படம் என்று போற்றி பாராட்டப்பட்டு வருகிறது. படம் ஆரம்பம் முதல்  கிளைமாக்ஸ் வரை முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்தை கொண்டது என்றும் குறிப்பாக சரியான நேரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமான ’உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் இடம்பெற்ற ’அழகிய லைலா’ பாடல் இடம்பெற்றதும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் இந்த படம் நெருக்கமானதாக மாறிவிட்டது.

வேறு மொழி படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அசல் தமிழ் படம் போல் தான் ஒவ்வொரு காட்சியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிசில் ஜோசப் முதலில் நிகிலா விமலை காதலிப்பார். ஆனால் அந்த காதல் கைகூடாமல் போன நிலையில், நிகிலா விமல் குறித்து வதந்தியை கிளப்பி விடுவார்.

இந்த நிலையில் பிருத்விராஜ், நிகிலாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் பிசில் ஜோசப்புக்கு  பிரித்விராஜின் தங்கையே திருமணம் செய்ய முயற்சி செய்வார்கள். பிசில் - நிகிலா காதல் குறித்து பிரித்விராஜ் தெரிந்து கொண்டு, இந்த திருமணத்தை நிறுத்த பார்ப்பார். பிசில் ஜோசப்பும் ஒரு கட்டத்தில் திருமணம் வேண்டாம் என்று கூறும் நிலையில் அதன்பின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்.



அதன் பிறகு  ஏற்படும் திடுக்கிடும் திருப்பம், அந்த திருமணத்திற்கு பிருத்விராஜ் எதிர்ப்பு தெரிவிப்பது, அவரது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்வேன் என்று பிசில் ஜோசப் சவால் விடுவது, இடையில் யோகி பாபு வந்து திருமணத்தை தடுக்க குட்டையை குழப்புவது என முழுக்க முழுக்க காமெடி காட்சிகளால் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கும். கடைசியில் குருவாயூர் அம்பல நடையில் திருமணம் நடந்ததா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

இயக்குனர் விபின் தாஸ் தனது முந்தைய படமான ’ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படம் போலவே இந்த படத்தையும் காமெடியாக ஒவ்வொரு காட்சியும் எடுத்திருப்பார்  என்பதும் இதில் நடித்த ஒவ்வொரு நடிகர்களுமே தங்களுடைய கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபுவை மிகச் சரியான இடத்தில் பயன்படுத்தியது, அழகிய லைலா பாடலை ரசிக்கும் வகையில் படமாக்கியது என்று மிகவும் புத்திசாலித்தனமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இது போன்ற முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட படம் வராதா என்று ஏங்க வைக்க அளவுக்கு இந்த படம் இருப்பதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement