• Jan 19 2025

தனுஷ், விமல், பிரபுதேவா சூரி: ஒரே நேரத்தில் வெளியான 4 பாடல்கள்..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

இன்று மாலை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தனுஷ், விமல், பிரபுதேவா மற்றும் சூரி ஆகியோர்களின் படங்களில் இடம்பெற்ற 4 பாடல்கள் வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இசை விருந்து கிடைத்துள்ளது.

தனுஷ் நடித்த ’ராயன்’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பாடல் சற்று முன் வெளியாகிய இணையத்தில் வைரலாகி வருகிறது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த பாடல் பாடலை எழுதி பாடியவர் தெருக்குரல் அறிவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபுதேவா மற்றும் பாபா பாஸ்கர் இந்த பாடலின் நடனத்திற்கு இயக்குனர்களாக பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் ஐம்பதாவது படமான ’ராயன்’ படத்தை அவரே இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ராம் இயக்கத்தில் உருவான ’ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஏழு மலை’ என்ற பாடலும் இன்று வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை மதன் கார்த்தி எழுத யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ நாராயணன் ஆகிய இருவரும் பாடியுள்ளனர். மெலோடி பாடலாக அமைந்துள்ள இந்த பாடலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி உள்ள ’சார்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’பனங்கருக்கா’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. விமல் மற்றும் சாயா நடிப்பில் உருவான இந்த பாடலை சித்து குமார் கம்போஸ் செய்திருக்க ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரபுதேவா மற்றும் வேதிகா நடிப்பில் உருவான ’பேட்ட ராப்’  என்ற படத்தில் இடம்பெற்ற ’அதிரட்டும் டும் டும் டும்’ என்ற பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  டி. இமான் மற்றும் தீப்தி சுரேஷ் பாடிய இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார்.

 ஒரே நேரத்தில் திகட்ட திகட்ட நான்கு பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement