• Oct 02 2025

ப்ரீத்தி கரிகாலன் இயக்கும் விக்ரமன் – சுப்ரிதா திரைப்படம்:...!பூஜையுடன் இன்று தொடக்கம்...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பிரீத்தி கரிகாலன் இயக்கும் புதிய ரொமாண்டிக் காமெடி திரைப்படம் சமீபத்தில் எளிய மற்றும் ஆன்மிக நிறைந்த பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் விக்ரமன் மற்றும் சுப்ரிதா ஜோடியாகத் தோன்றுகின்றனர்.


உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ரொமாண்டிக் காமெடி ஜானர், காதல் மற்றும் நகைச்சுவையை கலந்த அழகான அனுபவங்களை தரக்கூடியது. இந்த ஜானரில் உருவாகும் புதிய படம், இளைஞர்களின் மனதை உருக்கும் தருணங்கள், சிரிப்பூட்டும் காட்சிகள் மற்றும் கண்கவரும் ஒளிப்படங்களுடன் கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகிறது.

படக்குழுவினர் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த தொடக்க விழாவில் பங்கேற்று, படத்தின் வெற்றிக்காக தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


புதிய கதைக்களம், புதிய அணுகுமுறை, மற்றும் வித்தியாசமான காட்சியமைப்புகள் ஆகியவற்றுடன், இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் காமெடி தரத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement