தமிழக அரசியல் வட்டாரத்தில் பிரசாந்த் கிஷோரின் ஈடுபாடு பற்றி நீண்ட நாட்களாகவே பல விவாதங்கள் எழுந்துவருகின்றது. அந்தவகையில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் அதன் தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோரை அமர வைத்ததற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சூழலில் இயக்குநர் பேரரசுநேர்காணல் ஒன்றில் கதைக்கும் போது, "பிரசாந்த் கிஷோர் கூலிக்கு மாறடிக்க கூடியவர்!" என கருத்து தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசனைகளை வழங்கி, கட்சிகளுக்கு வெற்றியை உறுதி செய்யும் ஒரு பெரிய நபராக இந்திய அளவில் காணப்படுகின்றார்.
எனினும் அவர் பற்றி அடிக்கடி எழும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமே உள்ளன. அந்தவகையில் பேரரசு கூறும் போது, "அவர் பணத்திற்காக யாருக்காக இருந்தாலும் உதவுவார் என்றதுடன் அவர் கூலிக்கு மாறடிக்க கூடியவர்" என விமர்சித்திருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோரை அமர வைத்தது தவறு என இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது அனைத்து தளபதி ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!