• Jan 18 2025

நீங்களாச்சி, பிக் பாஸ் ஆச்சி... எல்லாரும் நன்றி போகப்போறன் கிளம்பி... கோவாக்கு பறந்து சென்ற பிரதீப் ஆண்டனி வைரல் டுவிட்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி தற்போது நீங்கலாச்சி உங்க பிக் பாஸ் ஆச்சி அப்டின்னு bye bye சொல்லிட்டு கோவாக்கு பறந்து போய்ட்டாரு. வயில் கார்ட் என்றி கொடுப்பாரு என்று எதிர்பாத்திருந்த நேரத்துல இப்படி செய்துட்டேறேன்னு ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அவருடைய புதிய முயற்சிக்கு ஆதரவு வழங்கி வாரங்க. இந்நிலையில் தற்போது இன்னுமொரு டுவிட் பதிவை வெளியிட்டுள்ளார். 


கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நாலு ஃபாரீன் படம் பார்த்து திருடி ஸ்க்ரிப்ட் எழுதப் போவதாக பிரதீப் ஆண்டனி கூறியிருப்பது ஒரு ஜாம்பவானை மனதில் வைத்து தெரிவிக்கப்பட்டதாக கூறுகிறார்கள் ரசிகர்கள்.


பிக் பாஸ் 7 வீட்டில் பிரதீப் ஆண்டனி இருந்தால் அங்கிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்கள். இந்நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் மூன்று பேரை ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். அதில் ஒருவர் பிரதீப் ஆண்டனி கிடையாது. அவர் பிக் பாஸுக்கு பெரிய கும்பிடாக போட்டுவிட்டு கோவாவுக்கு சென்றுவிட்டார்.


கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் பிரதீப் ஆண்டனி. விமானத்தில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ஒரு வேளை வானிலையால் விபத்து ஏற்பட்டா கூட என் மேல பழி வருமோ என தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டில் அவர் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொன்னதை பிரதீப் இன்னும் மறக்க முடியவில்லை. அதனால் தான் இப்படி சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் ஆதரவாளர்கள் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.



Advertisement

Advertisement