• Jan 19 2025

மக்களுக்கு தெரியும் நான் யாருன்னு..மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை நானில்லை! தமிழ்நாடே என் பக்கம் இருக்கு! கொந்தளித்த மன்சூர் அலிகான்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை திரிஷா குறித்து கேவலமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. தற்போது அதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடயம் குறித்து பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும்இ நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் என்று மிகவும் கீழ்த்தனமாக அவர் பேசினார்.இதனால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். இதன்பின் லோகேஷ் கனகராஜும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், நடிகை த்ரிஷாவப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. மேலும் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது  என்றும் நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.  

அதன்படி, நடிகை த்ரிஷாவின் விவகாரம் சர்ச்சையான நிலையில் இன்றைய தினம்  செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலி கான், 'நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டிதான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் சர்ச்சையானால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கேட்கவில்லை. என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குள் அவர்கள் அந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை. எரிமலை குமுறினால் சுற்றியிருப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள்' என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement