தமிழ் சினிமாவில் உணர்ச்சி மிகுந்த சமூக கருத்துள்ள திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் நம்பிக்கையைப் பெற்றவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இவரது புதிய முயற்சியாக வெளியான DNA திரைப்படம், வெளியான முதல் வாரத்திலேயே விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது.
இதில் கதாநாயகனாக அதர்வா, கதாநாயகியாக மலையாளத்தின் திறமைமிகு நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளனர். அவர்களின் நடிப்பு, கதை நகர்வுகள், சமூக சிந்தனைகள், மற்றும் திருப்பங்கள் என்பன அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஆழமாக பாதித்திருந்தது.
சமீபத்தில், இந்த படம் குறித்து நடிகரும், இயக்குநருமான பிரபு தேவா தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர்,"Watched DNA movie very interesting team..." என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபு தேவாவின் பாராட்டுக்கு பின், #DNAmovie, #PrabhudevaOnDNA போன்ற ஹாஷ்டாக்குகள் ட்ரெண்ட் ஆகியுள்ளன. அத்துடன் இந்த பாராட்டைப் பார்த்த படக்குழுவினர் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!