• Jan 19 2025

விஜய் டிவியில் புத்தம்புதிய சீரியல்... கதாநாயகியாகும் பிரபல சீரியல் வில்லி அடித்தது ஜாக்போட்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் வில்லி ரோல்லில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை  சுவாதிகா செந்தில்குமார். சின்னதிரையில் ஒரு தடவை வில்லியாக நடித்து விட்டால் கதாநாயகியாக வருவதே சிரமம் அந்நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லியாக நடித்து  வரும் நடிகை சுவாதிகா செந்தில்குமார் தற்போது புதிதாக தொடங்க உள்ள சக்தி ஐபிஎஸ் என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் .

தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை சுவாதிகா செந்தில்குமார் அடுத்து வரும் சக்தி ஐபிஎஸ் என்ற சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள தகவலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் .


விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில்  தமிழும் சரஸ்வதியும்.ஒன்றானது. தம்பிக்கு பக்கபலமாக இருந்து அவ்வப்போது ஐடியா கொடுக்கும் கேரக்டரில் சிறப்பாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனங்களை பாராட்டுக்களாக கூறி வருகின்றனர்.


சிறு நகரத்தில் பிறந்த ஒரு பெண் தனது ஐபிஎஸ் கனவை எப்படி நிறைவேற்றிக்கொள்கிறார்? இதற்காக அவர் எதிர்கொள்ளும்  தடைகள் என்ன என்பது தொடர்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக பெண்ணின் மனதை பற்றிய கதையாக அமைகிறது .என்று தெரியவந்துள்ளது .


சமூவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுவாதிகா செந்தில் குமார் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சக்தி ஐபிஎஸ் சீரியலின் பூஜை தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். பரம்பொருள் என்ற படத்தில் நடித்துள்ள இவர், தற்போது சக்தி ஐபிஎஸ் தொடரின் மூலம் நாயகியாக மாறியுள்ளார்.


Advertisement

Advertisement