• Jan 19 2025

நண்பனை நம்பி நடுத்தெருவுக்கு வந்த பிக்பாஸ் பாலாஜி! தன் வலி யாருக்கும் வரக்கூடாது என அட்வைஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் ஆகும். இப் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே தனி ரசிகர்களே இருக்கிறார்கள்.  

அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை நூல் இழையில் தவறவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். எனினும் இவருக்கு என்ற தனி  ரசிகர்களே இருக்கிறார்கள். 

அடுத்ததாக அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் டைட்டில் வின்னரானார் பாலாஜி முருகதாஸ். சிறுவயதில் இருந்தே பெற்றோர் சப்போர்ட் இல்லாமல் தனி ஆளாக தன்னை உருவாக்கிக் கொண்டவர் பாலாஜி.


இந்த நிலையில்,  கிட்டத்தட்ட 10வருட போராட்டத்திற்கு பின் 'வா வரலாம் வா' என்ற படத்தில் ஹீரோவாகஅடியெடுத்து வைத்துள்ளார்  பாலாஜி முருகதாஸ். 

இவ்வாறான நிலையில், குறித்த படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட போது, தன் வாழ்க்கையில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

என்னுடைய குறிக்கோள் காசு கொடுத்து நடிக்க கூடாது. அதேபோல காசு வாங்காமலும் வேலை செய்யக் கூடாது. இதற்கு பின்னால் என் வாழ்க்கையில் கசப்பான சம்பவமொன்று நடந்தது. 


அதாவது, என்னுடைய நண்பர் பிரசாந்த் என்பவர் சௌந்தர் என்ற ஒரு இயக்குனர் இருக்கிறார். அவர்  ஒரு தயாரிப்பாளரை பிடித்து வைத்திருக்கிறார். அந்த தயாரிப்பாளரிடம் ஷார்ட் ஃபிலிம் எடுத்துக் காட்டினால் அவர் வாய்ப்பு தருவாராம். அதனால் அந்த இயக்குனருக்கு ஒரு 180000 தொகை தேவைப்படுவதாக கூறி என்னிடம் பணம் கேட்டார். 

நானும் சரி நண்பர் கேட்கிறாரே என்று கல்லூரிக்கு கட்ட வேண்டிய பணத்தை எடுத்துக் கொடுத்தேன். அவ்வளவுதான் அடுத்த நாளே நண்பரும் இல்லை, அந்த இயக்குனர் சௌந்தரும் இல்லை. இவ்வாறு இரண்டு பேரும்  பணத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

இதை தொடர்ந்து  கல்லூரிக்கு பணம் கட்ட முடியாததால் கல்லூரி படிப்பை டிராப் செய்து விட்டேன்' என மன வருத்தத்துடன் பேசியுள்ளார் பாலாஜி.


 

Advertisement

Advertisement