யூத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமான கென் கருணாஸ், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நகைச்சுவை, எமோஷன், காதல் ஆகியவற்றை சமநிலையாக இணைத்த முழுமையான என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. இதனால், ‘யூத்’ படம் இளம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார் மற்றும் மீனாட்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப உறவுகள், இளைஞர்களின் உணர்வுகள் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், பலரின் மனதையும் தொட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு ‘யூத்’ திரைப்படத்தை பார்த்து கென் கருணாஸை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கென் இயக்கிய முதல் படத்திலேயே இப்படியான வரவேற்பு கிடைத்ததற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் இதனைப் பாராட்டி, கென் கருணாஸின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Listen News!