• Jul 05 2026

ஸ்ரீலீலாவுக்கு தனுஷ் படக்குழு கொடுத்த ஸ்பெஷல் பிறந்தநாள் ட்ரீட்..! வைரலாகும் போட்டோஸ்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷின் 55வது திரைப்படமாக உருவாகி வரும் ‘D55’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகே டேக்ஸ்டியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்போது ‘D55’ என்ற தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி நடிக்கவுள்ளனர். மேலும், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்தின் இசையை கவனிக்கிறார். படத்தின் அறிவிப்பிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று நடிகை ஸ்ரீலீலாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘D55’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஸ்ரீலீலாவின் புதிய தோற்றம் மற்றும் கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.


மேலும், ‘D55’ திரைப்படம் தொடர்பான முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் படத்தின் தலைப்பு, கதாபாத்திர விவரங்கள் மற்றும் படப்பிடிப்பு முன்னேற்றம் குறித்த தகவல்களை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement