• Apr 14 2026

அம்மாவோடு சேர்ந்து அனுபமா பரமேஸ்வரன் அடித்த லூட்டி! இணையத்தில் லீக்கான போட்டோஸ்..

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது இயல்பான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், அடிக்கடி தனது தினசரி வாழ்க்கை சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.


இன்ஸ்டாகிராமில் பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள அனுபமா, தனது சிம்பிளான லுக்காலும் இயல்பான சிரிப்பாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். குறிப்பாக, மேக்கப் இல்லாத புகைப்படங்களுக்கும் கூட அதிக வரவேற்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது அவர் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் இருவரும் மிக எளிமையான உடையில், சிரித்தபடி காணப்படுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த புகைப்படம் வெளியானதும் ரசிகர்கள் பலரும் லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, அனுபமாவின் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

Advertisement