விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், சாய், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய திரைப்படங்களில் இணைந்துள்ளது. இதில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. அதேநேரம் ‘சீதக்காதி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இதனால் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு காணப்பட்டது. நேற்று படம் வெளியான நிலையில், ரசிகர்களிடையே திரைப்படம் குறித்த பேச்சுகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பத்தா’ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் ரசிகர்களின் வரவேற்பு மற்றும் திரையரங்கு காட்சிகளின் எண்ணிக்கையை பொறுத்து படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!