• Oct 02 2026

வெளியீட்டுக்கு முன்பே பரபரப்பு... ஜெயிலர் 2 படத்திற்கு சன் பிக்சர்ஸ் செய்த அதிரடி சம்பவம்

shali / 56 minutes ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ‘ஜெயிலர் 2’ IMAX திரைகளிலும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement