• May 19 2024

பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்த பதான்...கொண்டாட்டத்தில் படக்குழு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் நேற்று முதல் உலகம் முழுவதும்  பிரமாண்டமாக வெளியானது.பான் இந்திய படமாக ரிலீஸான பதானில், ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோருடன் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஷாருக்கானின் திரைப்படம் வெளியாவதால் அவரது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.எனினும் இதனிடையே பதானுக்கு எதிராக பாய்காட் பிரசாரமும் செய்யப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமான வசூல் சாதனை படைத்துள்ளது இந்தப் படம்.

ஷாருக்கான் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்கள் வெளியாகவில்லை. இதனால் அவர் நடித்துள்ள பதான் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதான் நேற்று வெளியானது. அத்தோடு ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனேவும், வில்லனாக ஜான் ஆப்ரஹாமும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 'பேஷ்ரம் ரங்' பாடலில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி அணிந்திருந்தது கடும் சர்ச்சையாகிருந்தது.


அத்தோடு காவி பிகினி சர்ச்சையை கையிலெடுத்த பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பதான் படத்துக்கு எதிராக பாய்காட் பிரசாரத்தை ஆரம்பித்தனர். இதனால் பதான் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சல்மான் கானும் கேமியோர் ரோலில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால் பதான் படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக் எல்லாவற்றையும் பொய்யாகிய ரசிகர்கள், ஷாருக்கானுக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டை பரிசாக கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ஷாருக்கான் கேரியரில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.அத்தோடு  கடந்த வருடத்தில் பாய்காட் செய்யப்பட்ட இந்தி படங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்த நிலையில், பதான் வேறலெவலில் சம்பவம் செய்துள்ளது.


பதான் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் மட்டுமே 25 கோடி ரூபாய்க்கும் மேல் என கூறப்பட்டது. இவ்வாறுஇருக்கையில், முதல் நாளில் 55 முதல் 60 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இந்தி திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனை எனவும் சொல்லப்படுகிறது.


அத்தோடு, தொடர்ந்து விடுமுறை தினங்கள் இருப்பதால் முதல் வாரம் முடிவில் 150 முதல் 200 கோடி வரை வசூலித்துவிடும் எனவும் உறுதியாகக் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் முதல் இரண்டு வாரங்கள் இதே வசூல் நிலவரம் இருந்தால், பதான் தான் 2023ம் ஆண்டின் முதல் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement