• Apr 18 2024

கீர்த்திசுரேஷ் -நானியின் ''தசரா'' பட டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள ‘தசரா’ படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் துஷாகர் செருக்குரி தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகிறது.


தற்போது, தசரா படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் ஜனவரி 30-ஆம் தேதி அதாவது, அடுத்த வாரம் திங்கட்கிழமை வெளியாகும் என படக்குழுவினர் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளங்களில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அந்த ப்ரோமோ வீடியோவில், ஒரு நபர் பீடியை பற்றவைப்பதைக் காட்டுகிறது, மேலும் அவர் தீ குச்சியை வீசும்போது, தீ பெரிதாகி கடைசியாக டீசர் வெளியிட்டு தேதியைக் காட்டுகிறது. தசரா திரைப்படம் ஒரு மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமாக உருவாகி இருக்கிறது. 



Advertisement

Advertisement

Advertisement