• Jan 18 2025

உடம்பு ஃபுல்லா பெயிண்ட் அடிச்சு.. முட்டி போட்டு.. என்ன ஆச்சு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தங்க மயிலுக்கு?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மீதும், அவரது உடை மீதும் மஞ்சள் பெயிண்ட் அடிக்கும் நிலையில் அவருக்கு  நாய் போடப்படுகிறது. அதன்பின் அவர் ஒரு ஸ்டேஜ் பர்பாமன்ஸ் செய்ததாக தெரிகிறது. இது குறித்து சரண்யா தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

சில விஷயங்கள் நாம வெற்றிக்காக பண்ணுவோம், சில விஷயங்கள் நாம மனசார பண்ணுவோம். அப்படி பண்ணது தான் இது.

DJD டான்ஸ் ஷோவுக்காக இந்த நாய்க்குட்டி வேஷம். தொடக்கத்துல ஒரு ஆர்வத்துல ஏத்துகிட்டேன், ஆனா 2வது நாள்ல இருந்து முட்டி ரெண்டும் வீங்க தொடங்கிடுச்சு. 4 வது நாள் ஸ்டேஜ் ரிகர்சல், எழுந்து நிக்கவே முடியல, முட்டியில அழுத்தம் அதிகமாகி ரத்தம் வடிய தொடங்கிடுச்சு.

5 வது நாள் ஸ்டேஜ் பெர்பாமன்ஸ், அன்னைக்கு நாங்க டேஞ்சர் ஜோன், கிட்டத்தட்ட வெளியேற வேண்டிய ஜோடியா இருந்தோம்.எங்கள பொருத்த வரைக்கும் அந்த ஸ்டேஜ்ல அதுதான் எங்களோட கடைசி பெர்பாமன்ஸ்.

அடுத்த 5 நிமிசத்துக்கு நமக்கு முட்டின்னு ஒன்னு இல்லன்னு நினெச்சுகிட்டு ரெண்டு முட்டியும் அழுந்தி படும்படி ஒரு நாய்க்குட்டியாவே மனசார நம்பி ஆடுனேன்.

ஆடி முடிச்சு எழுந்து நின்னு பாத்தா அந்த பார்வையாளர்கள் மட்டுமில்லாம போட்டியாளர்கள் உட்பட எல்லாரும் எழுந்த நின்னு மனசார கைதட்டுனாங்க.
எப்பவும் ஜாலியா கமெண்ட் சொல்லுற மாஸ்டர் கண்ணுல தண்ணிய பாத்தோம். அன்னைக்கு நாங்க ஜெயிச்சோம். இந்த பெர்பாமன்ஸ், எங்களை காப்பாத்தி அடுத்தடுத்த சுற்றுக்கு இன்னும் தைரியமா கூட்டிட்டு போச்சு.

வேறெந்த வேஷம் போடும்போதும் இவ்ளோ வலிய அனுபவிச்சதில்ல. அதே மாதிரி மனசு இவ்ளோ திருப்தியா ஃபீல் ஆனதும் இல்ல. பாடி லாங்குவேஜ், காஸ்ட்யூம், பாட்டு செலக்சன் ந்னு பாத்து பாத்து சொல்லிக்கொடுத்த என் நடன இயக்குனருக்கு என்றென்றும் நன்றிகளும் அன்பும்..!


Advertisement

Advertisement