• Jan 19 2025

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை.. இவங்க எப்படி ஒத்துக்கிட்டாங்க..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் 27 ஆம் முதல் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவில் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டீமுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் அவரே பொறாமைப்படும் அளவுக்கு இந்த நிகழ்ச்சியை நடத்தி நடத்திக் காட்ட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் குக்குகளாக நடிகை வடிவுக்கரசி, தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் வசந்த், சமையல் கலைஞர் மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி,  விடிவி கணேஷ், இர்பான், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சீசனில் ஆச்சரியப்படும் வகையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’  நடிகை சுஜிதா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.



பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகம் சிறப்பாக வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்திலும் பாண்டியன் ஜோடியாக நடிக்க சுஜிதாவை விஜய் டிவி அணுகியதாகவும், ஆனால் மூன்று வளர்ந்த பையன்களுக்கு அம்மாவாக நடிக்க முடியாது என்று சுஜிதா கூறியதாகவும் செய்திகள் வெளியானது. சம்பளம் அதிகம் தருகிறோம் என்று விஜய் டிவியில் மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்ட போதும் சுஜிதா முடியாது என்று சொல்லிவிட்டதால் விஜய் டிவி சுஜிதா மேல் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில் தான் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எப்படி வந்தார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

சுஜிதா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து கலகலப்பாக இந்த நிகழ்ச்சி செல்லும் என்றும் ஏற்கனவே பிரியங்கா இருக்கும் இடத்தில் கலகலப்பு இருக்கும் என்பதால் சீசன் 5 கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement