• Sep 13 2024

கோபியின் கண்முன்னே பாக்கியாவை கூட்டிச் சென்ற பழனிச்சாமி- கரண்டியால் அடிக்க ஓங்கிய ராதிகா- Baakiyalakshmi Serial

stella / 9 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா வீட்டிற்கு வந்திருக்கும் பழனிச்சாமி பாக்கியாவை ஒரு விஷயமாக வெளியில் கூட்டிட்டு போகப்போறேன் என்று ராமமூர்த்தியிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லி விடுகின்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கோபி பாக்கியா கிச்சனில் நிற்கும் போது எங்கே போற என்று கேட்க அந்த நேரம் ராதிகா கரண்டியை எடுத்து காட்ட கோபி அமைதியாகின்றார்.


பின்னர் பாக்கியாவும் பழனிச்சாமியும் போனதும் கோபி ராமமூர்த்தியிடம் சென்று நீங்க பண்ணுறது எதுவும் சரி இல்லப்பா என்று சொல்ல, அங்கு வரும் ராதிகா அவங்க எங்க போனாலும் உங்களுக்கு என்ன நீங்க எதுக்கு இதெல்லாம் விசாரிச்சிட்டு இருக்கிறீங்க எனத் திட்டுகின்றார்.இதனால் கோபியும் வாயை மூடிட்டு உள்ளே போய் விடுகின்றார்.

மறுபுறம் பாக்கியாவை ஒரு இடத்திற்கு கூட்டிட்டு வரும் பழனிச்சாமி, கவர்மென்ட் கான்ராக்ட் எடுத்த நபர் அந்த கான்ராக்டை யாருக்கோ கொடுக்கப்போறாராம். அதை நாங்க வாங்கிக்கலாம் என்று தான் உங்களை இங்கே கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல பாக்கியா சந்தோசப்படுகின்றார்.

தொடர்ந்து அவர்கள் வந்ததும் அவர்களிடம் பேச அவர்கள் தங்களுக்கு 1 லட்சம் ரூபா இன்னும் அதிகமாக வேணும் என்று சொல்ல,பாக்கியா ஒரு லட்சம் என் கிட்ட இல்லையே என்று சொல்ல அப்போ 50 ஆயிரம் கொடுத்திடுங்க என்று சொல்ல பழனிச்சாமி, அவங்க கொடுத்திடுவாங்க இந்த கான்ராக்டை மாத்திரம் அவங்களுக்கு கொடுத்திடுங்க என்று சொல்கின்றார்.


பின்னர் வீட்டில் ஈஸ்வரி இருக்கும் போது அங்கு வரும் கோபி சாப்பிட்டீங்களா என்று விசாரித்து விட்டு, பாக்கியா பழனிச்சாமியுடன் போன விஷயத்தை சொல்ல ஈஸ்வரி அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பேச, அப்போது அமிர்தா பாக்கியா எதற்காக வெளியில் போயிருக்கிறார் என்ற விஷயத்தைச் சொல்கின்றார்.

அதைக் கேட்ட கோபி குழப்பத்தில் இருக்க மறுபுறம் பாக்கியா கான்ராக்ட் கொடுக்கிறவங்களுக்கு எப்படி பணம் கொடுக்கின்றது என யோசிச்சுக் கொண்டிருக்கும் போது பழனிச்சாமி தான் தருகிறேன் என்று சொல்ல முதலில் மறுப்புத் தெரிவிக்கும் பாக்கியா பின்னர் பணம் வாங்க சம்மதிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement