• Apr 01 2023

கடும் கோபத்தில் ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த பாக்கியலட்சுமி கோபி...அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

ரசிகர்களுக்கு ஏத்தாற் போல விறுவிறுப்புக் கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.தற்போது பாக்கியா கே்ட்டரிங்  தொழிலில் சம்பாதிக்க தொடங்கியிருக்கும் நிலையில், அதில் மேலும் ஜொலிப்பதற்காக ஆங்கிலம் கற்றுக்கொள்ள கிளாசுக்கு செல்கின்றார்.

அங்கு அவருக்கு பழனிச்சாமி என்ற புது கதாபாத்திரத்துடன் அறிமுகம் கிடைக்கிறது. அந்த ரோலில் நடிக்க ரஞ்சித் வந்திருக்கிறார். இத் தொடருக்கு புது கதாநாயகன் வந்துவிட்டதால் இனி கோபி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் குறையும் என அவரே வீடியோயில் பேசியுள்ளார்.


அத்தோடு தனக்கு இனி காட்சிகள் இருக்காது என கோபி விரக்தியில் பேசிய காரணத்தால் அவர் சீரியலை விட்டு வெளியேறுகிறாரா என சோசியல் மீடியாவில் தீயாய் பரவி இருந்தது.

அதற்கு தற்போது புது வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்து  உள்ளார் கோபி சதிஷ். 'கோபி ரோலுக்கு முக்கியத்துவம் குறையலாம் என்று மட்டும் தான் செய்தேன். அதை இப்படி மாற்றி செய்தியாக பரப்பிவிட்டார்கள்' என அவர் கோபமாக தெரிவித்து இருக்கிறார்.




Advertisement

Advertisement

Advertisement