• Oct 13 2024

ராதிகாவை தேடிச்சென்று கடுமையாக எச்சரித்த பாக்கியா.. வெளியான புதிய ப்ரோமோ

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களுள் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதன்படி, ராமமூர்த்தி இறந்த பிறகு ஈஸ்வரியை வழமை போல பொட்டு வைத்துக் கொள்ளுமாறு பாக்யா சொல்லி இருந்தார். மேலும் அவரே ஈஸ்வரிக்கு பொட்டையும் வைத்து விட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், நீ சொன்னதை கேட்டு நான் பொட்டு வைத்தது பிழையாக போயிட்டு, எனக்கு பொட்டு வேண்டாம் என்று ஈஸ்வரி தனது பொட்டை கழட்டி எறிந்து விட்டு செல்கின்றார்.

இதனால் பாக்கியா அத்தைக்கு யாரோ ஏதோ சொல்லி இருக்காங்க என்று சொல்ல, அந்த நேரத்தில் இனியா ராதிகா ஆன்ட்டியின் அம்மா தான் பாட்டிக்கு இப்படி சொன்னாங்க என்று சொல்லுகின்றார்.


அதாவது கமலா ரோட்டில் வைத்து ராமமூர்த்தியின் பூமாலை கூட இன்னும் காய்ந்திருக்காது. அதுக்குள்ள ஊர் சுத்த வெளிக்கிட்டிங்களா? அவருடைய ஆத்மா நல்லா சாந்தி அடையும் என்று திட்டி இருப்பார்.

இதைக்கேட்டு கோவப்பட்ட பாக்கியா, நேராக ராதிகாவிடம் சென்று உங்கள் அம்மாவுக்கு சும்மாவே இருக்க முடியாதா? என் மாமியார் விஷயத்தில் தலையிட்டால் நான் சும்மாவே இருக்க மாட்டேன் என்று கடுமையாக எச்சரித்து விட்டு வந்துள்ளார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ..

Advertisement