பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி பாக்கியாவிடம் ரெஸ்டாரெண்ட் எல்லாம் மூடிட்டு முதல்ல வீட்டில உட்காரு என்கிறார். பொறுப்பான அம்மாவ குடும்பத்தக் கவனி என்கிறார். அதுக்கு கோபி அம்மா என்னம்மா பேசிட்டிருக்கீங்கள் இப்படி எல்லாம் பேசாதீங்க என்கிறான். பின் இனியாவ பாக்கியா வீட்ட இருந்து பாக்கட்டும் என்கிறார் ஈஸ்வரி.
அதுக்கு பாக்கியா பேசி முடிச்சிட்டிங்களா என்று கேக்கிறாள். அதைத் தொடர்ந்து பாக்கிய எனக்கு என் பசங்கள எப்படி வழக்கோணும் என்று தெரியும் என்கிறாள். பிறகு அதயாரும் எனக்கு சொல்லித் தரவேண்டிய அவசியம் இல்லை என்கிறாள். பின் என்ன பண்ணனும் என்று எனக்குத் தெரியும் அத்த என்று சொல்லிட்டு அங்கிருந்து போறாள் பாக்கியா.
அதுக்கு ஈஸ்வரி என்ன சொல்லிட்டுப் போறாள் பாத்தியா என்கிறாள். பின் கோபி சிரிச்சுக் கொண்டு அம்மா பாக்கியா சொன்னதில என்ன தப்பிருக்கு என்கிறான். அதனைத் தொடர்ந்து ரெஸ்டாரெண்ட்க்கு போன பாக்கியா அங்க செல்விய கூப்பிட்டுக் கொண்டிருக்காள். பிறகு ஆகாஷ் செல்விகிட்ட அம்மா ஏதும் சாப்பிட வாங்கிட்டு வரவா என்று கேக்கிறான். அதுக்கு செல்வி விசம் இருந்தா வாங்கிட்டு வா என்றாள்.
பிறகு பாக்கியா செல்வி வீட்ட வந்து நிக்கிறாள். அதனைப் பார்த்த செல்வி ரொம்பவே சந்தோசப்படுகிறாள். அப்படியே கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். பிறகு ஆகாஷும் பாக்கியா கிட்ட வந்து சாரி கேக்கிறான். பின் செல்வி தானும் ஆகாஷும் ஊரவிட்டே போகப்போறதா சொல்லுறாள். அதோட பாக்கியன்ர முகத்தப் பாக்கவே கஷ்டமா இருக்கு என்கிறாள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!