• Jan 26 2026

தனுஷ் சாரின் படத்தை இயக்குறேனா? முழுக்க வதந்தி.. இசைவெளியீட்டில் பச்சமுத்து ஸ்பீச் வைரல்!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் "லப்பர் பந்து" என்ற உணர்வுபூர்வமான கதையைக் கொண்டு தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, சமீபத்தில் நடைபெற்ற "இட்லி கடை" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, தனது எதிர்கால திட்டங்கள் குறித்து மிகவும் சுவாரஸ்யமான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.


இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, தனது உரையில் கலக்கலான சிந்தனைகளை பகிர்ந்திருந்தார்.

அவர் கூறியதாவது, "என்னுடைய அடுத்த படத்தை இயக்குவதற்காக இடம் பார்க்க இங்கு வந்தேன். தனுஷ் சாரின் படத்தை நான் கூட இயக்கலாம். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம். இவை அனைத்தும் வதந்தியாக கூட இருக்கலாம்...." என்றார் பச்சமுத்து. 


அவர் பேசிய இந்த வரி, விழாவில் இருந்தவர்களிடையே குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்து மிக விரைவாக வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement