• Jan 18 2025

அக்ஷய்குமாரால் விழா மேடையில் அசிங்கப்பட்ட பிரபல நடிகை! கொஞ்சம் கூட உணர்வு இல்லையா? வைரல் வீடியோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

1990 ஆம் ஆண்டு கால கட்டங்களில் இவர் நடித்த அதிரடி படங்களாக கிலாடி, மோஹ்ரா  மற்றும் சப்ஸே படா கிலாடி ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் நகைச்சுவை படங்களிலும் நடித்துள்ளார்.

தான் நடித்த திரைப்படங்களின் பிரபலத்திற்காகவும் தனது நடிப்பிற்காகவும் பல விருதுகளை வென்றுள்ளார். ஃபிலிம்பேர் சைமா பல விருது அமைப்புகளின் கீழ் பல விருதுகளை வென்றுள்ளார். அத்துடன் 2009 ஆம் ஆண்டு அக்ஷய் குமார் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.

அண்மையில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் இணைந்து ஆடியோ பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆனது.


இந்த நிலையில், மீட் மியான் சோட்டே மியான் என்ற இந்தி படத்தில் நடித்து வரும் அக்ஷய் குமார், அதன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகையின் ஆடையை மிதித்து சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, தற்போது அக்ஷய் குமார் நடித்து வரும் இந்தி படத்தின்  பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இந்த விழா மேடையில் அக்ஷய்குமார் அருகில் இருந்த இந்தி நடிகை ஆல்யா,  நீளமான ஆடை அணிந்து நின்றுள்ளார்.


அந்த ஆடையை கவனிக்காமல் அக்ஷய் குமார் மிதித்தபடியே நின்று இருக்கின்றார். இதனால் ஆல்யாவால் அசைய முடியவில்லை. சில நிமிடங்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துள்ளார். 

ஆனாலும் அக்ஷய்குமார் ஆடையை மிதித்தபடியே மற்றவர்களுடன் மேடையில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement