• Apr 26 2024

ஒண்டி வீரன் நானடி- கோட் சூட் அணிந்து வேற லெவல் லுக்கில் மாஸ் காட்டும் நடிகர் சிம்பு- குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியாகியிருந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் இப்படமும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


பி. ஜெயமோகன் எழுதிய நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை, தயாரிப்பாளர்  ஐசரி கே. கணேஷ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.,ப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது.


இந்த படம் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது.கஷ்டப்படும் பின்னணியில் இருந்து ஒருவன் சிட்டிக்கு வர, கேங் ஸ்டார் கும்பல்களிடம் மாட்டி கொள்ள, பின் எப்படி அவரும் கேங் ஸ்டாராக மாறுகிறார் என்பதை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் 


இதில் ராதிகா சரத்குமார் , சித்திக் , நீரஜ் மாதவ் மற்றும் ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க சித்தி இத்னானி நாயகியாக நடித்துள்ளார்., இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், . சிம்பு கோட் சூட் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement