• Jan 18 2025

ஹரிஷ் கல்யாணின் மாமியாராக இருப்பதில் விருப்பமில்லை ! முன்னணி நடிகையின் அதிரடி பகிர்வு..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

திரைப்படமான "லப்பர் பந்து" கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இப்படம், கிரிக்கெட் விளையாட்டு சார்ந்து பேசி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புடன், வசூலில் சாதனை புரிந்துள்ளது.


இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, ஸ்வாசிகா, பால சரவணன் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்வாசிகா, படத்தின் வெற்றியை ஒட்டி அளித்த பேட்டியில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.


அந்த பேட்டியில் ஸ்வாசிகா, "சுமார் 10 ஆண்டுகள் கழித்து தமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அசோதா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த படத்திற்கு பல திரைப்பட நட்சத்திரங்கள் எனக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். புதிதாக திரையில் வந்த எனக்கு இவ்வாறான வரவேற்பு எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.


படத்தில் ஹரிஷ் கல்யாணின் மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதில் முதலில் தயக்கம் இருந்தது. ஹரிஷ் கல்யாணின் மாமியாராக நடிப்பதால், அது ஒரு முத்திரை போடப்படும் என நினைத்தேன். ஆனாலும், சவாலை ஏற்று நடிக்க முடிவு செய்தேன். இப்போது, இந்த கதாபாத்திரத்துக்காக பலர் எனக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்," என்று அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement