• Oct 01 2025

வெற்றிமாறன் & சிம்பு கூட்டணியில் வடசென்னை 2 இல்ல.. ஆனால்..புதிய அதிரடி! இயக்குநர் ஓபன்டாக்

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கம்பீரமான கதைக்களங்கள், சமூக உணர்வுள்ள கதைகள், யதார்த்தமான காட்சிகள் மற்றும் வலிமையான நடிகர்களின் நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் தற்போது தனது அடுத்த படத்திற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். 


ஆனால் இது ரசிகர்கள் எதிர்பார்த்த 'வடசென்னை 2' இல்லை என்பது சிறிய அதிர்ச்சி தான். இருப்பினும், 'வடசென்னை' படத்தின் உலகத்துக்குள் நடக்கும் ஒரு புதிய கதை என்ற சூழலில் தயாராக உள்ள இந்த படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

வெற்றிமாறனும், நடிகர் சிம்புவும் ஒன்றாக பணியாற்ற உள்ளார்கள் என தகவல் வந்திருந்தது. இதனை  உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் வெற்றிமாறன் கூறியதாவது, 


"இது 'வடசென்னை 2' இல்லை. ஆனால் 'வடசென்னை' படத்தின் உலகத்துக்குள் ஒரு கதையாகவே இது அமைந்திருக்கும்." என்றார். 

இவ்வார்த்தைகள், வெற்றிமாறன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தி இருக்கின்றன. 2018ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ ஒவ்வொருவரது மனதிலும் நிழலாக இருக்க, அதே சூழ்நிலை, ஆனால் புதிய கதாபாத்திரங்களுடன் படம் வெளிவரும் என்பது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement