• Oct 01 2025

கேமரா என்னை அழைக்கிறது! மறுபிறவி எடுத்த மம்மூட்டியின் உருக்கமான பதிவு.?

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின்  மெகா ஸ்டார் ஆன மம்மூட்டி, உடல் நலக்குறைவு காரணமாக  சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் விலகி இருந்தார். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல்  தமிழிலும் பல  படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் மம்மூட்டி. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக தன்னுடைய  இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.


அதில்,  நான் என் வாழ்க்கையில் எதை மிகவும் நேசிக்கிறேனோ, அதை செய்ய வந்துவிட்டேன். ஒரு சிறிய இடைவெளிக்கு பின். என்னைப்பற்றி இத்தனை நாட்கள் விசாரித்த அனைவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. கேமரா என்னை அழைக்கிறது..  எனக் குறிப்பிட்டு  காருக்கு முன் ஸ்டைலாக போஸ் கொடுத்து   புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 


தற்போது இவர் மகேஷ் நாராயணன் இயக்கும் மல்டி ஸ்டார் படமான 'பேட்ரியாட்' படத்தில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.  இந்த படத்தின் புதிய ஷெடூல் இன்று ஐதராபாத்தில் நடக்க உள்ளது.  இதனால் அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். 

இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லால், மம்மூட்டி கூட்டணி இணைந்து நடிக்க உள்ளனர். இது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இலங்கை, அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஐதராபாத், டெல்லி, கொல்லி ஆகிய இடங்களிலும்  நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement