• Dec 26 2024

சோபிதாவுக்கு பதிலா நாயை வைச்சு அசிங்கமா.. பெரும் அவமானத்தில் அக்கினேனி மருமகள்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணம் கடந்த டிசம்பர் நான்காம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டார்களுடன் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் என முக்கிய பிரபலங்களுடன் நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பலரையும் கவர்ந்த ஒரு ஜோடியாக வலம் வந்தார்கள். ஆனாலும் யார் கண் பட்டதோ தெரியவில்லை இவர்களுடைய திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்தார்கள்.

இதைத் தொடர்ந்து நாக சைதன்யா சோபிதாவை காதலித்தார். இவர்களுடைய காதலுக்கும் நாக சைதன்யா வீட்டில் பச்சைக் கொடி காட்டப்பட்டது. அதன்பின்பு திருமண நிச்சயதார்த்தமும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு சோபிதாவை தனது மருமகளாக ஏற்றுக் கொண்டார் நாகர்ஜுனா.

d_i_a

டிசம்பர் நான்காம் தேதி அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இவர்களுடைய திருமணம் விமர்சையாக நடைபெற்றது. நாக சைதன்யாவின் திருமணத்தின் போது சமந்தா தனது இன்ஸ்டா  பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதனால் பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு நாக சைதன்யா தான் சமந்தாவை மிஸ் பண்ணியதாக கமெண்ட் பண்ணி வந்தார்கள்.


இந்த நிலையில், சோபிதா துலிபாலா கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட அவமானம் பற்றி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தெரிய வருகையில், ஒருமுறை மாடலிங் ஆடிஷனுக்கு சென்றபோது அங்கு கேமரா ரிப்பேர் ஆகிவிட்டதாக மறுநாள் சோபிதாவை வரும் படி கூறி உள்ளார்கள். அதற்குப் பிறகு சோபிதாவின் இடத்தில் ஒரு நாயை வைத்து படம்பிடித்து உள்ளார்கள்.

அதன்பின் சோபிதா மிகப்பெரிய ஹீரோயினாக ஆன பின்பு அதே விளம்பரத்திற்காக ஐஸ்வர்யா ராய் உடன் நடித்ததாக கூறியுள்ளார். இதன்போது தனக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் தனக்கு பதிலாக நாயை வைத்து எடுப்பது மிகப்பெரிய அவமானமாக உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். தற்போது அவர் கூறிய தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement