• Mar 12 2026

என் இனிய தமிழ் மக்களே.! குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்.. – வைரமுத்து வேண்டுகோள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், கிராமிய வாழ்க்கையை திரையில் உயிர்ப்பித்த மகா கலைஞராகவும் விளங்குபவர் இயக்குநர் பாரதிராஜா. பல தலைமுறைகளின் ரசிகர்களை தனது படைப்புகளால் ஈர்த்த அவர், தமிழ் திரையுலகில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


தகவல்களின் படி, பாரதிராஜா சில நாட்களாக உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள தகவலின் படி, பாரதிராஜா தற்போது நலமாக உள்ளார் என்றும், சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் பதிலளித்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியிருந்தது.

பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதும், தமிழ் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரது உடல்நலம் விரைவில் மேம்பட வேண்டும் என பிரார்த்தனைகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பிரபல கவிஞரும், பாரதிராஜாவின் நீண்ட நாள் நண்பருமான வைரமுத்து, இயக்குநரின் உடல்நிலை குறித்து உருக்கமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது.


வைரமுத்து அதன்போது, “தொற்றில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு கொண்டிருக்கிறார். மகா கலைஞனே விரைவில் மீண்டு வா. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற உன் கரகரப்பான காட்டுக் குரலுக்காக ஆஸ்பத்திரிக்கு வெளியே அலைபாய்கிறது காற்று.” என்று கூறியுள்ளார். 

இந்த வரிகள், பாரதிராஜாவின் குரல், அவரது சினிமா நடை, தமிழ் மக்களுடனான உறவு ஆகிய அனைத்தையும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement