• May 21 2024

சர்தார் படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- கார்த்தியின் பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார், முத்தையா இயக்கத்தில் விருமன் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் நடித்து வருகின்றார். இதில் சர்தார் தவிர்த்து மற்ற இரு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இப்போது சர்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் ராஷி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தீபாவளி நாளில் அஜித் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் படமும் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வரும் மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சர்தார் படத்தின் அடுத்த முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதனால் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அல்லது டீசர் என ஏதேனும் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:



Post Settings

Move upMove downToggle panel: Post Settings

Advertisement

Advertisement