• Jul 04 2026

புதிய வாழ்க்கை புதிய இன்னிங்ஸ் — சமந்தாவின் 39வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கெளதம் இயக்கத்தில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அறிமுகமான சமந்தா, அந்த படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 

எனினும் நாக சைதன்யாவின் குடும்பம் பாரம்பரியமிக்க குடும்பம் என்பதால் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும் நாக சைதன்யாவின் தீவிரத்தால் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடிப்பில் தொடர்ந்து ஈடுபட்டார். ஆரம்பத்தில் சைதன்யா ஆதரவாக இருந்தாலும், நாளடைவில் நாகர்ஜுனா குடும்பம் சமந்தாவின் நடிப்பில் அதிருப்தி கொண்டது. இந்த பிரச்சினை பெரிதாகி இறுதியில் இருவரும் பிரிந்தனர்.


பின்பு நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்துகொண்டார். சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த ஆண்டு இறுதியில் ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்தார். 

திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர முடிவெடுத்துள்ள சமந்தா, மா இன்ட்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து நடிக்கவும் உள்ளார். மேலும் சில வெப் சீரிஸ்களிலும் நடிக்க இருப்பதாக தெரிகிறது. 

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நேற்று  தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். 

தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் புதிய உச்சத்தை நோக்கி பயணிக்கும் சமந்தாவுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement