• May 11 2026

நீங்க கல்யாணம் பண்ணாதீங்க சார்..! அனிருத்திடம் சிவகார்த்திகேயனின் வைரல் கிண்டல்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாக  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் திகழ்ந்து வருகின்றார்கள்.  

குறிப்பாக எதிர்நீச்சல், ரெமோ, டாக்டர், டான் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் தனது இயல்பான நடிப்பாலும், நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை கவர்ந்துவர, அனிருத் தனது புதுமையான இசை பாணியால் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். 

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பிரபல நிகழ்ச்சியில் அனிருத் பற்றி சிவகார்த்திகேயன் பேசியது வேகமாக வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், 


"எங்களுக்கு எட்டு மணி ஆனா வீட்டிலிருந்து போன் வரும். இவரு எட்டு மணிக்குதான் எந்திரிப்பார். ஜாலியா இன்னைக்கு வர்க் பண்ணுவோமா என்று கேப்பார். அப்ப நான் கேப்போம் ஏன் சார் கல்யாணம் பண்ண மாட்டீங்க என்று. விடுங்க சார் ஜாலியா இருக்கேன் என்பார்.

ஆனால் யோசிச்சு பார்த்தேன் — அவரு ஜாலியா இருந்தா நமக்கு ஹிட் பாட்டு வருது. நமக்கு ஹிட் பாட்டுதான் வேணும். அதனால நீங்க ஜாலியாவே இருங்க சார். எங்களுக்கு வைப் பண்ண பாட்டு கொடுத்துக்கிட்டே இருங்க சார்!" என்று கூறி கலாய்த்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த நகைச்சுவையான பேச்சு ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது. அனிருத் திருமணம் செய்தால் ஹிட் பாட்டு வராது என்ற கிண்டலான கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement