• Apr 19 2026

மாரி செல்வராஜின் அடுத்த ஹீரோ வரிசையில் இணைத்திருக்கும் அடுத்த நடிகர் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமூக கருத்தை பேசும் முக்கிய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ்."பரியேறும் பெருமாள்" படத்தின் மூலம் அறிமுக இயக்குராக அறிமுகமான மாரி செல்வராஜ் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.


தொடர்ந்து தனுஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலினினை வைத்து எடுத்த படங்களான "கர்ணன்" மற்றும் "மாமன்னன்"  தமிழ் திரையுலகில் மாரி செல்வராஜிற்கு வெற்றி இயக்குனர் எனும் இடத்தை பெற்றுக்கொடுத்தது. தற்போது தனது இயக்கம் மற்றும் தயாரிப்பான "வாழை" படத்தின் திரையிடலிற்கான வேலைகளில் பிஸியாக உள்ளார் மாரி செல்வராஜ்.


அடுத்து துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் "பைசன்" திரைப்படத்தினை இயக்கும் மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் மற்றும் கார்த்தியை வைத்து படம் பண்ணவுள்ளதாகவும் தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கதையை தயார் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.அத்துடன் தளபதி விஜயுடன் இணையும் வாய்ப்பு தளபதியின் அரசியல் என்ட்ரியால் தடைப்பட்டதாகவும் கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.   

Advertisement

Advertisement