• Sep 14 2024

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரிஷப் ஷெட்டியின் பதிவு !

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

"காந்தாரா" திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் மற்றும் இயக்குரான ரிஷப் ஷெட்டி. இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதலை மையக்கருவாக எடுத்துக்கொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி கதையை தாண்டிய ஒரு பிரமாண்டத்தை தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.


அண்மையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக பெங்களூர் சென்றிருந்த "தங்கலான்" படக்குழுவை நேரில் சந்தித்த ரிஷப் ஷெட்டி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.தற்போது ரிஷப் ஷெட்டி சியான் விக்ரமை பற்றி பகிர்ந்திருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


குறித்த பதிவில் சியானுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரிஷப் ஷெட்டி "எனது பயணத்தில், விக்ரம் சார் எப்போதும் என் இன்ஸ்பிரேஷன்.24 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று என் ஹீரோவை சந்திப்பது என்னை பூமியின் அதிர்ஷ்டசாலியாக உணர வைக்கிறது. என்னைப் போன்ற நடிகர்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி, மேலும் "தங்கலான்" படத்தின் வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள்." என குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement