• Jan 19 2025

நடிகர் சூரியுடன் சந்தானத்தை கம்பேர் பண்ணி கலாய்க்கும் நெட்டிசன்கள்! தெறிக்கும் மீம்ஸ்கள்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்று பிரபல நட்சத்திரங்களாக திகழும் நடிகர்களுக்கு பின்னாடி பல கஷ்டமான காலங்களும் இருந்துள்ளன. அவர்களின் தீவிர உழைப்பாலும் விடாமுயற்சியின் காரணமாகவும் தான் இன்று முன்னிலை நட்சத்திரங்களாக வலம்  வருகின்றார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் சூரி மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக திகழ்ந்து வருகின்றார். ஆரம்பத்தில் சின்ன கேரக்டர்களிலும் அதற்குப் பிறகு காமெடி நடிகராகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய சூரி, இன்று கதாநாயகனாக மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ளார்.

சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை திரைப்படம் பாரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த கதைகளையும் தனக்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது வெளியான கருடன் படமும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது.


அதேபோல நடிகர் சூரிக்கு முன்னதாகவே நடிகர் சந்தானம் ஹீரோவாக மாறிவிட்டார். ஆனால் இதுவரை அவர் ஹீரோ போல நடிக்கவில்லை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றார்கள்.


இந்த நிலையில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிப்பதற்கு பதிலாக மீண்டும் அவர் காமெடியனாக நடிக்க வரலாம் என மீம்ஸ்களைப் போட்டு வைரலாக்கி வருகின்றார்கள் ரசிகர்கள்.

அத்துடன் நடிகர் சூரியை மறுபடியும் காமெடி செய்ய வரவேண்டாம் அவ சீரியஸ் ஆக நடிப்பதே சிறப்பாக உள்ளது என அவரையும் கம்பேர் பண்ணி நடிகர் சந்தானத்தை பங்கம் செய்துள்ளார்கள்.

Advertisement

Advertisement