• Jan 19 2025

எல்லாத்துக்கும் காரணம் உதயநிதி தான்.. அவர் வெற்றி பெற வேண்டும்.. இந்தியன் தாத்தா புகழாரம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஜூன் முதலாம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன், சங்கர், சிலம்பரசன், ராகுல் பிரீத், அனிருத், காஜல் அகர்வால், நெல்சன் திலிப் குமார், லோகேஷ் கனகராஜ், பாபி சிம்ஹா, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதன் போது இயக்குனர் சங்கர் மற்றும் அனிருத் உட்பட பலர் இந்தியன் 2 படத்தை பற்றி தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.


இந்த நிலையில், உலக நாயகன் கமலஹாசன் 'மக்கள் கொடுத்த பொறுப்பில் உதயநிதி வெற்றி பெற வேண்டும்' என்று ஸ்டாலின் உதயநிதி பற்றி பேசி உள்ளார்.

அதாவது இந்தியன் 2 படம் சிக்கலில் இருந்தபோது இரண்டு, மூன்று வருடமாக நகராமல் இருந்தது. இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியால் இந்த படம் அடுத்த கட்டத்துக்கு சென்றது. தங்களுக்கு துணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறு பொறுப்பு கொடுத்துள்ளார்கள். இந்த பொறுப்பில் அவர் வெற்றி பெற வேண்டும். எங்களுக்கு துணையாக இருந்தது போல் அவர் நாங்களும் துணையாக நிற்க வேண்டிய சூழல் வரும் என்று இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement