பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வடிவு கோமதியைப் பார்த்து உடம்பு எப்புடி இருக்கு என்று கேட்கிறார். மேலும், வீட்டில நடந்ததெல்லாத்தையும் பழனி சொன்னாரு, நீங்கள் சமாதானம் ஆகிட்டீங்களா என்று கேட்கிறார். அதுக்கு கோமதி சமாதானம் ஆகிட்டோம் என்கிறார். அந்த நேரம் பார்த்து சக்திவேலும் அங்க வந்து ஹாஸ்பிடலில இருந்திட்டு வந்தியே உடம்பு எப்புடி இருக்கு என்று கேட்கிறார்.
அதைக் கேட்ட கோமதி அதிர்ச்சியுடன் ரொம்பத் தான் அக்கறை என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து சக்திவேல் பாண்டியனை பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட வடிவு பேசாம இருங்க தம்பி என்று சொல்லுறார். பின் கோமதி சக்திவேலைப் பார்த்து என்ர புருஷன் ஒன்னும் உன்ன மாதிரி அம்மாவை வீட்டை விட்டு துரத்தின மாதிரி இல்ல என்கிறார்.

மேலும், எனக்கு என்ர பிள்ளைங்க இருக்கு, புருஷன் இருக்கு அவங்க பார்த்துப்பாங்க என்கிறார். அந்த நேரம் பார்த்து பாண்டியன் அங்க வந்து கோமதி கதைக்கிறதைப் பார்த்து சந்தோசப்படுறார். அதைத் தொடர்ந்து கடைக்குப் போன பாண்டியன் கோமதிக்கு போன் எடுத்து சாப்பிட்டியா என்று கேட்கிறார். அதைக் கேட்ட கோமதி சந்தோசப்படுறார்.
மறுபக்கம், முத்துவேலோட முகம் ஒருமாதிரி இருக்கிறதைப் பார்த்த சக்திவேல் குமாரைப் பார்த்து அண்ணான்ட நடவடிக்கை சரியில்ல என்று சொல்லுறார். பின் முத்துவேல் ஹாஸ்பிடலில போய் நிற்கிறதைப் பார்த்த போய் கதைப்பமோ என்று ஜோசிக்கிறார். பின் டாக்டர் கிட்ட போய் அவருக்கு என்ன பிரச்சனை என்று கேட்க டாக்டர் அதுக்கு கான்சர் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!