விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கியவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமானதாக பிக்பாஸ் நிகழ்ச்சி காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பின் காரணமாக ஆண்டு தோறும் தவறாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.
முதல் ஏழு சீசங்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனாலும் எட்டாவது சீசனில் அவர் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு காரணம் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக தனது படிப்பை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு சென்றது தான்.
இதனால் உலகநாயகனின் இடத்திற்கு விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் எழுந்தபோதும் அவற்றை தவிடு பொடியாக்கும் வகையில் இந்த சீசனை வெற்றிகரமாக கையாண்டு முடித்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் வின்னராக வெற்றி பெற்ற முத்துக்குமரன் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!