• Jan 19 2025

'கொட்டுக்காளி' படத்திற்காக தன்னை வருத்தி சூரி எடுத்த ரிஸ்க்! அசுர வேகத்தில் இப்படியொரு முன்னேற்றமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக  பட்டையை கிளப்பி வந்த நடிகர் சூரி, தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து அவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

அதன்படி, நடிகர் சூரி நடித்த 'கொட்டுக்காளி' என்ற திரைப்படம் சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், இந்த திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்திற்காக தான் எடுத்த வித்தியாசமான முயற்சிகள் குறித்து சமீபத்தில் சூரி அளித்த பேட்டி தற்போது வைரலாக உள்ளது. அதன்படி அவர் கூறுகையில்,


இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான குரல் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, அந்த குறளுக்காக நான் என்ன என்ன  செய்தன்  என்பதை அறிந்து, வெளிநாட்டில் இந்த படத்தை பார்க்க வந்தவர்களும் ஆச்சரியமடைந்தார்கள்.

கரகரப்பான குரல் வேண்டும் என்பதற்காக முதலில் நான் ஒரு மருத்துவரை  அணுகினேன்.  ஆனால் அந்த டாக்டர் நீங்கள் சொல்வது போல் என்னால் செய்ய முடியாது என்று மறுத்தார். 


ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதபடி இந்த படத்திற்காக நான் வித்தியாசமாக நடிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதன் பின் குறித்த டாக்டர் தனக்கு சில அறிவுரைகளை கூறினார்.

அதன்படி நான் நடந்து கொண்டு தொண்டையைக் கவ்வும் வகையில் சில நாட்டு மருந்துகள் எடுத்துக் கொண்டு அந்தப் படத்திற்காக டப்பிங் பேசியதாகவும் குறிப்பிட்டார்

இவ்வாறு எந்த ஒரு நடிகரும், சூரி ஒரு திரைப்படத்திற்காக எடுத்துள்ளதை  ரிஸ்க்கை பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.

மேலும், அவருடைய கடுமையான உழைப்பிற்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement