• Mar 25 2026

தனது படத்தை பார்க்க மாறுவேடத்தில் சென்ற ரஜினிகாந்த்... ரசிகனின் செயலால் தப்பித்து ஓடினாரா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

'ஜெயிலர்' படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம்  ரஜினி, லோகேஷ் கனகராஜ் இணையும் 'தலைவர் 171' படத்தை தயாரிக்க இருக்கிறது. 

தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த.

ஐஸ்வர்யா ரஜினி காந்த இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் கடந்த 9ம் திகதி வெளியானது. இந்த திரைப்படத்தின் வெற்றியை அண்மையில் தான் கொண்டாடினர்கள்.


இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படம் பார்க்க மாறுவேடத்தில் சென்ற சம்பவம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஒருமுறை தனது திரைப்படம் ஒன்றை பார்ப்பதற்கு மாறுவேடத்தில் கேப், கண்ணாடி எல்லாம் அணிந்து ஆள் அடையாளம் தெரியாம் சென்று படம் பார்த்துள்ளார். 

முழு படத்தையும் பார்த்த ரஜினி திரையரங்கிற்கு வெளியே வந்துள்ளார்.


இவ்வாறு படம் பார்த்து வெளியே வந்த ரஜினியை, ரசிகர் ஒருவர் தலைவா என அழைத்துள்ளார். இதை காதில் வாங்கிய ரஜினி, மாட்டிகிட்டோமே என மிரண்டு போய் பதட்டத்துடன் திரும்பி பார்த்துள்ளார்.

ஆனால் அந்த ரசிகர் தனது நண்பரை தான் தலைவா என்று அழைத்துள்ளார். அதன் பிறகு ரஜினி ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றுவிட்டாராம். 

இந்த தகவலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். தற்போது குறித்த சம்பவம் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement