• Oct 04 2024

குக் வித் கோமாளி புகழ் மைம் கோபியின் அம்மா காலமானார்! பலரும் இரங்கல் தெரிவிப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மைம் கோபி. இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் பட வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும் பக்க பலமாக காணப்பட்டது.

2008 ஆம் ஆண்டில் வெளியான கண்ணும் கண்ணும் படம் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து சிறப்பாக பணியாற்றி வருகின்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கு பற்றி வின்னரான மைம் கோபி, தொடர்ந்து சினிமா துறையில் பயணித்து வருகின்றார்.


இந்த நிலையில் , மைம் கோபியின் அம்மா வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். அவர் உடல் நலக்குறைவால்  தொடர்ந்து பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதை அறிந்த பலரும் கோபிக்கு ஆறுதல் சொல்லி வருவதோடு அவரது அம்மாவின் மரணத்திற்கும் இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

மேலும் இன்றைய தினம் மைம் கோபியின் வீட்டில் உள்ள அவரது அம்மாவின் உடலிற்கு இறுதிச் சடங்குகள் மாலை அளவில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement