குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி பிரபலமானவர் தான் மைம் கோபி. இவர், திரைப்படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து மாஸ் காட்டி இருப்பார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக காணப்படும் இவர், நடிப்பு பயிற்சி ஆசிரியர் ஆகவும் இருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 இன் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போது, இந்த சீசனில் நான் ஜெயித்தால் இந்த பணத்தை எனக்காக பயன்படுத்த மாட்டேன். மாறாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில உதவிகளை செய்துள்ளார் மைம் கோபி.
தற்போது அவரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அதன்படி முதன்முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்று பலரது பாராட்டையும் பெற்றுள்ளார் மைம் கோபி.
                             
                            
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!