• Nov 04 2026

MGR ன் பிள்ளை பிக்பாஸ் வீட்டில் செய்யும் சில்மிஷங்கள்..! சூடுபிடிக்கும் ஆள் மாறாட்ட டாஸ்க்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8 தற்போது சுவாரசியமாக நடைபெற்று வருகின்றது. இதில் வைக்கப்பட்ட ஆள் மாறாட்டம் என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களைப் போல வேடமிட்டு பிக் பாஸ் வீட்டில் சுற்றி வருவதோடு அவர்கள் மீது உள்ள நல்ல அபிப்பிராயங்களை மட்டும் இல்லாமல் அவர்கள் மீதுள்ள வன்மத்தையும் கொட்டி தீர்த்து வருகின்றார்கள்.

அதன்படி தற்போது பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ள டாக்கில் சௌந்தர்யா பட்டையை கிளப்பி வருகின்றார். இதை தொடர்ந்து ஆனந்தி, ரஞ்சித் ஆகியோர் தங்களது கேரக்டர்களை சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

d_i_a

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட ஆள் மாற்றம் டாக்கின்படி ரஞ்சித்தும் ஆனந்தியும், சௌந்தர்யா ஜெஃப்ரி போல நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியுள்ளது. 


அதே வேலை நடிகர் ரஞ்சித்தின் உண்மையான பெயர் செந்தில்குமார். அந்தப் பெயரை தனக்கு வைத்தது எம்ஜிஆர் தான் எனவும் தான் சினிமாவுக்காக ரஞ்சித் என பெயரை மாற்றியதாகவும் பிக் பாஸில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதைப் பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் எம் ஜி ஆரின் மகளை கவுக்க பாக்குறீங்களா? என கமெண்ட் பண்ணி வருவதோடு ரஞ்சித் சிறப்பாக நடித்து வருவதாகவும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement