• Jun 07 2026

பயத்தின் உச்சியில் நாமினேஷன் வாபஸ் வாங்கும் மீனா.. முத்து எடுத்த முடிவு? டுடே எபிசோட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், தேர்தலில் மீனா வெற்றி பெறுவார் என்று பயந்த சிந்தாமணி, முத்து மீது தாக்குதல் நடத்துமாறு ரவுடி ஒருவரிடம் சொல்கிறார்.

அதன்படியே முத்துவும் மீனாவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் செல்லும்போது, மீனாவை தாக்க முயற்சிக்கிறார் அந்த ரவுடி. ஆனால் ரவுடியைப் பார்த்த மீனா, முத்துவைக் காப்பாற்றிவிட்டு தானே தாக்குதலுக்கு உள்ளாகிறார்.  

இதன்போது அந்த ரவுடியை முத்து பார்த்து விடுகிறார். அதற்குப் பின்னர் மீனா வேட்பு மனு தாக்கலில் கையெழுத்திட்டுவிட்டு மருத்துவமனைக்குச் செல்கிறார். அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்த மீனா தான் இந்தத் தேர்தலிலிருந்து வாபஸ் பெறப் போவதாக கூறுகிறார்.


"எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு எதுவும் ஆனால் தன்னால் தாங்க முடியாது" என்று புலம்புகிறார். எனினும் முத்து, "நீ இப்போது பின்வாங்கினால் அது பலருக்கும் தவறான முன்னுதாரணமாகிவிடும், அதைத்தான் சிந்தாமணியும் எதிர்பார்க்கிறார்" என்று அறிவுரை கூறுகிறார்.

அதற்குப் பின்னர் மீனாவைப் பார்க்க ஸ்வேதா, ஸ்ருதி மற்றும் மீனாவின் குடும்பத்தினர் அனைவரும் வருகின்றனர். அதே நேரத்தில் முத்து, இந்த சம்பவத்தை யார் செய்தது என்று விசாரிக்குமாறு தன்னுடைய நண்பர்களிடம் கூறுகிறார். இதுவே இன்றைய எபிசோடின் சாரம்.

Advertisement

Advertisement