• Apr 15 2026

விஷ்ணுவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த மாயா! திடீர் பாசமா? அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்.

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. 

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக காணப்படும் மாயா, சக போட்டியாளரான விஷ்ணுவுக்கு முத்தம் கொடுத்துள்ளார். தற்போது குறித்த காணொளி வைரலாகியுள்ளது.


அதன்படி, பிக் பாஸ் வீட்டிலிருக்கும் மாயா, பூர்ணிமா அடிக்கடி விதிமீறல் செய்வதாகவும், அதனை வார இறுதியில் கமல் கேட்க மறுப்பதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

எனினும், தற்போதுள்ள பிக் பாஸ் போட்டியாளர்களின் மாயா மட்டுமே தான் வந்த நோக்கத்தை நோக்கி விளையாடுவதாக பலராலும் பேசப்படுகிறது.

ஏற்கனவே, மாயா, பூர்ணிமாவின் உறவு பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டும் இல்லாமல், வெளியிலும் தப்பான கண்ணோட்டத்தில் தான் பேசப்படுகிறது.

இவ்வாறான நிலையில், விஷ்ணுவுக்கு முத்தம் கொடுத்துள்ளார் மாயா. குறித்த வீடியோ இதோ...



Advertisement

Advertisement